பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டகளப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில், ஏறாவூர் பிரதேசத்தின், புன்னைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஏறத்தாழ 370 ஏக்கர் பரப்பளவான காணி நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிக்கும் பயன்படுத்தாது அல்லது எவ்வித நிர்மாணிப்புகளோ அல்லது குடியிருப்பாளரோ அற்ற காணியாக காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) மேற்படி காணி பிரதேச செயலாளர் அறிந்திருக்கத்தக்கதாக கைத்தொழில் பேட்டையொன்றை நிறுவுவதற்கு இனம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இதற்கு அமைவாக, மேற்படி காணியை கைத்தொழில் பேட்டையொன்றை நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கு சட்டரீதியாக கையளிப்பதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி காணி, மூதலீட்டு வலயமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான ஆரம்பக் கற்கையை மேற்கொள்வதற்காக ரூபா 38 மில்லியன் செலவில் இலங்கை முதலீட்டுச் சபையின் மூலம் லங்கா ஹைட்ரோலிக் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) தற்போது மேற்படி காணியில் ஒருசிலர் பனைமரங்களைத் தறித்து அனுமதியின்றி வேலிகளை நிர்மாணித்து, நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளனரா என்பதையும்;
(vi) ஏற்புடைய அதிகாரிகள் அனுமதியற்ற நிர்மாணிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-21
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks