E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1731/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

    1. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1980 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கடல் மணல் படுக்கைக்கு அண்மையில் மண் அகழ்தல் கருத்திட்டமொன்று இடம்பெற்றது என்பதையும்;

      (ii) பயங்கரவாதச் செயற்பாடுகளின் நிமித்தமாக அக்கருத்திட்டம் அரைவாசியில் நிறுத்தப்பட்டது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) கடலையும் வாவியையும் இணைக்கும் வாய் வருடாந்தம் மூடப்படாதிருத்தல்;

      (ii) வருடம் பூராவும் வாவியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன்பிடி நன்மையைப் பெற்றுக்கொள்ளல்;

      (iii) ஆழ்நீர் மீன் பிடிக்கும் படகுகளும் இழுவைப் படகுகளும் நங்கூரமிடுவதற்கு இலகுவாக வாவிக்குள் வரக்கூடியதாக இருத்தல்;

      (iv) வெள்ள நீர் விரைவாக கடலுக்குள் செல்வதால் வெள்ளத்தின் பொழுது நெல் வயல்கள் சேதமடையாதிருத்தல்;

      (v) வெள்ள நீர் இலகுவாக கடலுக்குள் செல்லுதல் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ள நிவாரண முயற்சிகளைக் குறைத்தல்;

      என்பன இக்கருத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்பதை அவர் அறிவாரா?

      (இ) (i) இக்கருத்திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அது எப்போது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks