பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு கல்வி வலயத்தின் கீழும் காணப்படுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கையையும்;
(ii) இஸ்லாம், இஸ்லாமியக் கற்கைகள், அரபு ஆகிய கற்பித்தல்களை மேற்படி வலயங்களில் மேற்பார்வை செய்கின்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் (இஸ்லாம்) பெயர்களையும்;
(iii) உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (இஸ்லாம்) இல்லாத கல்வி வலயங்களின் பெயர்களையும்;
(iv) இந்த கல்வி வலயங்களில் மேற்படி பாடங்கள் தொடர்பான கற்பித்தலை மேற்பார்வை செய்வதற்கு பணிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களின் பெயர்களையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை கல்வி நிர்வாக சேவை (விசேட பதவியணி - இஸ்லாம்) தொடர்பான வர்த்தானி அறிவித்தலில் இதற்கென இரண்டு வெற்றிடங்கள் மாத்திரம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிந்ததையும்;
(ii) கலைத்திட்டத்தில் சமயப் பாடம் கட்டாயமானதென்பதையும்;
(iii) இஸ்லாம் பாடத்தை மேற்பார்வை செய்யாமல் விடுவதானது முஸ்லிம் மாணவர்களுடைய சமயக் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) (i) இலங்கை கல்வி நிர்வாக சேவை (விசேட பதவியணி - இஸ்லாம்) பதவியணியில் அதிகரிப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) இல்லையெனில், பதிற் கடமை அடிப்படையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களை (இஸ்லாம்) நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) அவ்வாறெனில், எப்போது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-23
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks