E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1752/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. 1752/'17

      கௌரவ லக்கி ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான புகையிரதப் பெட்டிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், புகையிரதப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள காலம், அடிப்படை, வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள், இப்பெட்டிகள் இணைக்கப்பட்ட புகையிரதங்கள் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நிபந்தனைகளின் படி, புகையிரதப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து புகையிரத திணைக்களத்துக்கு அறவிடப்பட வேண்டிய சகல பணத்தொகைகளும் இன்றளவில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா;

      (ii) நிலுவைத் தொகைகள் அறவிடப்படவேண்டிய நிறுவனங்கள் யாவை;

      (iii) ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகை வெவ்வேறாக யாது ;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) புகையிரதப் பெட்டிகளை வழங்கியதால் இதுவரை புகையிரத திணைக்களத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், மொத்த நட்டம் எவ்வளவு;

      (iii) இந்நட்டத்தை புகையிரத திணைக்களத்துக்கு துரிதமாக அறவிட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்வாரா ;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-06

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks