பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1756/ '17
கௌரவ லக்கி ஜயவர்தன,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிகழ்காலத்தில் காட்டுப் பன்றிகளினால் மனித உயிர்களுக்கு சேதம் ஏற்படுகின்றதென்பதையும்;
(ii) தற்போது காட்டு யானை, முதலை, கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை ஆகிய மிருகங்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்பின்போது ஆண், பெண் பால்நிலை மற்றும் வயது பேதமின்றி ரூபா 200,000/- இழப்பீட்டுத் தொகையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) எனினும், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அத்தகைய இழப்பீடு வழங்கும் முறையியலொன்று இல்லை என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) அத்தகைய இழப்புகளுக்கு உள்ளாகி மிக நிர்க்கதியான நிலையில் உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையியலொன்று துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்காக துரிதமாக இழப்பீட்டு முறையொன்றைச் செயற்படுத்துவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-20
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-20
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks