பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1799/ '17
கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன் "பிம் சவிய" என்ற பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறையில் இருக்கிறதா என்பதையும்;
(ii) அது தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;
(iii) இன்றேல், "பிம் சவிய" நிகழ்ச்சித்திட்டம் நடைமுறையிலிருக்கும் மாவட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்பொழுது மேற்படி "பிம் சவிய" நிகழ்ச்சித்திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அந்த நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு உதவிகள் பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், அது ஒரு வெளிநாட்டு உதவியா அல்லது ஒரு கடனா என்பதையும்;
(iv) அந்த உதவியின் நிதி ரீதியான பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(v) "பிம் சவிய" நிகழ்ச்சித்திட்டத்துக்காக மதிப்பிடப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-04
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks