E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1805/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 1805/ '17

      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத என்ஜின்களில் தற்போது பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடியதான என்ஜின்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அந்த என்ஜின்களின் வகைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) இன்றளவில் உலகத்தின் பல நாடுகளில் M2 மற்றும் M4 வகை என்ஜின்கள் நீண்ட காலம் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும்:

      (ii) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான அந்த வகையைச் சேர்ந்த 27 என்ஜின்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென்பதையும்;

      (iii) அந்த என்ஜின்களின் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துமாறு இரத்மலான எந்திரப் பொறியியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) (i) இன்னும் பல வருடங்கள் சேவையில் ஈடுபடுத்தக் கூடியதான இந்த புகையிரத என்ஜின்களை பயன்பாட்டுக்கு உதவாததாக ஆக்கி அழிப்பதன் நோக்கம் யாது என்பதையும்;

      (ii) இதற்கு முன்னர் புகையிரத பணியாளர்களின் எதிர்ப்பை கவனத்திற்கொள்ளாது பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட M9 வகையைச் சேர்ந்த 09 புகையிரத என்ஜின்களில் இன்றளவில் பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடியதாக 03 என்ஜின்களே உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) ஆகவே, M2 மற்றும் M3 வகை என்ஜின்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா எள்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks