பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1861/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 1861/ '17

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் மாநகர திட்டத்தின் (Megapolis Plan) கீழ் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னோக்கியுள்ள 03 ஆண்டுகள் வரையில் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவிற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (ii) ஏற்கனவே ஏதேனும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாயின், அவை யாவை என்பதையும்;

      (iii) ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டவட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள திகதிகள் யாவை என்பதையும்;

      (iv) இதற்கென அரச மற்றும் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனின், அம்முதலீடுகள் தனித்தனியே யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள அல்லது ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) தற்சமயம் செலவிடப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) இதற்காக கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனின், கடன் பெற்றுக்கொள்ளப்படும் நிறுவனங்கள் மற்றும் கடன் தொகை எவ்வளவென்பதையும்;

      (v) இன்றேல், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் மேலும் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-17

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks