E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1871/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 1871/ '17

      கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015.01.08 ஆம் திகதி தொடக்கம் 2017.04.30 ஆம் திகதி வரை பிரதம அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) விஜயங்கள் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் யாவையென்பதையும்;

      (iii) ஒவ்வொரு விஜயத்துக்காகவும் ஏற்கப்பட்ட செலவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) பிரதம அமைச்சருடன் ஒவ்வொரு விஜயத்தின் போதும் பங்கேற்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக மொத்த எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) பிரதம அமைச்சருடன் வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்ற ஏனைய ஆட்களின் பதவிகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-20

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-20

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks