E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1955/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. கௌரவ கனக ஹேரத்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராம அலுவலர்களின் கடமைகளை இலகுவாக்குவதற்காக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட கணினிகளை வழங்குதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

      (ii) தற்போது கிராம அலுவலர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள கணினிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) இதுவரை கிராம அலுவலர்களுக்கு கணினிகள் வழங்கப்படாதுள்ள மாவட்டங்கள் மற்றும் வழங்கப்படவுள்ள கணினிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கணினிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கிராம அலுவலர்களின் அலுவலகங்கள் பேணிவரப்படுகின்ற கட்டிடங்களுக்கான வாடகையாக அரசாங்கத்தினால் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவு கிராமிய மற்றும் நகர பிரதேசங்களுக்கமைவாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) செலுத்தப்படுகின்ற இக்கொடுப்பனவு காலத்துக்கேற்றவாறு போதுமானதாக அமைகின்றதா என்பதையும்;

      (iii) போதுமானதாக இல்லாவிடின் இக்கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks