E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1961/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

    1. 1961/ '17

      கௌரவ பிரேமலால் ஜயசேக்கர,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 மே மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக முழுமையாக சேதமடைந்த 630 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்த 4,608 வீடுகளும் பதிவாகி உள்ளனவென்பதை அறிவாரா;

      (ii) சேதமடைந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க பொருத்தமான காணிகள் இனங்காணப்பட்டுள்ளனவா;

      (iii) இதன் பொருட்டு தோட்டக் கம்பெனிகளுக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படுமா;

      (iv) இந்தக் காணிகளை துரிதமாக சுவீகரிக்க தற்போது நிலவுகின்ற சட்டதிட்டங்களை திருத்தியமைப்பாரா;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) சேதமடைந்த வீடுகளுக்காக நட்டஈட்டுத் தொகையினை வழங்க அரசாங்கம் திட்டவட்டமான கால எல்லையொன்றினை தீர்மானித்துள்ளதா;

      (ii) அனர்த்தத்திற்கு இலக்காகிய அனைத்து வீடுகளுக்காகவும் நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுமா;

      (iii) வீடுகள் சேதமடைந்தமைக்காக நட்டஈட்டுத் தொகையினை வழங்கும்போது கவனத்திற் கொள்ளப்படுகின்ற அளவுகோல்கள் யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-19

கேட்டவர்

கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks