பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்வேறுபட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த வெட்டுப் புள்ளிகளைக் கொண்ட மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் சேர்ந்து பிற மாவட்டங்களில் அமைந்துள்ள உயர் தரத்திலான கல்வி நிலையங்களில் கல்வி பயின்று க.பொ.த (உயர்தரம்) பரீட்சைக்கு தாம் சேர்ந்துள்ள பாடசாலைகளின் மூலம் தோற்றி குறிப்பிட்ட மாவட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அனுமதிக்குரிய இட ஒதுக்கீட்டில் (Quota) சேர்ந்துகொள்கின்றனர் என்பதையும்;
(ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தின் காரணமாக குறைந்த வெட்டுப்புள்ளிகளைக் கொண்ட மாவட்டங்களில் வாழ்ந்து அங்கேயே கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கான வாய்ப்பு இழக்கப்படுவதன் மூலம் இவர்கள் உள ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;
(iii) பல்கலைக்கழக அனுமதியின்போது மாவட்ட மட்டத்தில் மாணவர்களை தரப்படுத்தும் அடிப்படையில் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொண்டதன் பின்னர், அந்த வரிசைக்கிரமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், இவ்வாறு குறைந்த வெட்டுப்புள்ளிகளைக் கொண்ட மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் மனநிலையைக் கருத்திற்கொண்டு பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் வருகையைத் தடுப்பதற்கும், அவ்வாறு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பாடசாலைகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-10
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-11-10
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks