E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1992/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ.

    1. 1992/ '17

      கெளரவ மயில்வாகனம் திலகராஜா,— தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் தற்போதைய கூட்டு உடன்படிக்கை விதிமுறைக்கு முரணாக "அவுட்குரோவர்" என்ற முறையை தோட்ட நிர்வாகத்தினுள் நடைமுறைப்படுத்தி வருவதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையிலுள்ள பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் யாவையென்பதையும்;

      (iii) அவை சட்டத்திற்கு கீழ்ப்படிந்து அல்லது கூட்டு உடன்படிக்கைக்கு அமைய செயற்படுகின்றனவா என்பதையும்;

      (iv) எதிர்காலத்தில் "அவுட்குரோவர்" முறை அமைச்சு மூலம் நடைமுறைப் படுத்தப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-27

கேட்டவர்

கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks