பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1993/ '17
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், அல்பதா, கரிசல், தலைமன்னார், காட்டாஸ்பத்திரி ஆகிய விளையாட்டு மைதானங்களுக்கு ரூபா ஒரு மில்லியன் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) 2016 ஆம் ஆண்டு விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கும் போது மன்னார் அல்-அஸார் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு ரூபா இரண்டு மில்லியனும், மன்னார் எருக்கலம்பிட்டி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு ரூபா மூன்று மில்லியனும், காட்டாஸ்பத்திரி விளைாயட்டு மைதானத்திற்கு ரூபா ஒரு மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) 2017 ஆம் ஆண்டு விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்கும் போது மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு ரூபா 5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;
(iv) இந்த நிதி ஒதுக்கீடுகள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்துக்கு மாத்திரம் சாதகமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) ஆமெனில், எதிர்காலத்தில் இவ்வாறு பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி அனைவருக்கும் சமனாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-28
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks