பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2072/ '17
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மின்வலு மற்றும் புதுப்பித்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடக்கு மாகாணத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கு கடந்த காலத்தில் "வடக்கின் வசந்தம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலவசமாக மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன என்பதையும்;
(ii) பின்னர் மின் கட்டணம் மாதாந்தம் அறவிடப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இதற்கேற்ப, கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களிலும் மின் கட்டணம் மாதாந்தம் அறவிடப்பட்டுள்ளதென்பதையும்;
(iv) ஆயினும், கடந்த 6 மாத காலத்தினுள் கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கட்டணம் அறவிடப்படவில்லை என்பதையும்;
(v) மின் கட்டணத்தை மாதாந்தம் அறிவிடாமல் ஒரே தடவையில் பல மாதங்களுக்கான கட்டணத்தை அறவிடுவதனால் பெருந்தொகையான பணத்தை ஒரே தடவையில் செலுத்துவதற்கான பொருளாதார வலு இல்லாத அம்மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மின் கட்டணத்தை மாதாந்தம் அறவிடாதிருப்பதற்கான காரணம் கிளிநொச்சி மின்சார சபை அலுவலகத்தில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களா என்பதையும்;
(ii) ஆமெனில், இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) நிலுவைத் தொகையை தவணை அடிப்படையில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) எதிர்வரும் காலத்தில் மாதாந்த அடிப்படையில் இடையறாமல் மின் கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-03-22
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks