பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0462/ ‘10
கெளரவ நூர்டீன் மசூர்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஒருவர் விவாக ஒப்பந்தம் செய்கின்ற போது ஆட்கள், ஆதனங்கள், கைத்தொழில்கள் புனர்வாழ்வளிப்பு அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற நிதி உதவி எவ்வளவென்பதையும்,
(ii) 2004 ஆம் ஆண்டு முதல் 2010, மே மாதம் வரை புத்தளம், வனாதவில்லுவ, கல்பிட்டி, முந்தலம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த, மேற்படி நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(iii) இடம்பெயர்ந்துள்ள இரண்டு குடும்பங்களுக்கிடையில் திருமண ஒப்பந்தம் றே்கொள்ளப்படும் போது அந்த இரு சாராருக்கும் வழங்கப்படும் நிதித் தொகை மற்றும் அவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ள சந்தர்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) மேற்படி (அ) (iii) இன் பிரகாரம் இடம்பெற்றுள்ள விவாகங்கள் மற்றும் இடம்பெயர்நத குடும்பமொன்றின் உறுப்பினரொருவராக செய்துள்ள விவாகங்களுக்கேற்ப 2004-2010 காலத்தினுள் வழங்க்ப்பட்டுள்ள நிதித் தொகை, நிதி பெறுநர்களின் பெயர்கள், முகவரிகள், நிதி வழங்கப்பட்டுள்ள திகதிகள், செலவுறுதிச் சீட்டு இலக்கங்கள் மற்றும் திகதிகள் யாவையென்பதை மேற்குறிப்பிட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-06
கேட்டவர்
கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks