E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2114/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. 2114/ '17

      கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓலுமடு, மன்னாக்கண்டல் மற்றும் கறிப்பட்டமுறிப்பு ஆகிய கிராமங்களில் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள் என்பதையும்;

      (ii) அம்மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட காலம் தொடக்கம் அப்பிரதேசங்களில் நிலவும் காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக பெரும் தொகையானோர் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால் இவர்களின் வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகள் அழிந்தும் சேதமடைந்தும் வருகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து அம்மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-21

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks