E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2121/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 2121/ '17

      கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015.01.09 திகதி உள்ளவாறு மற்றும் 2017.06.30 திகதி உள்ளவாறு,

      (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை தரைப்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி முகாம்களுக்கு இணைக்கப்பட்டு சேவையாற்றிய மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.30 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,

      (i) அகற்றப்பட்டுள்ள தரைப்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) தரைப்படை முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தரைப்படை முகாம்களையும் மற்றும் இவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் படைவீரர்களையும் அகற்றுவதானது தேசிய பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks