E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2122/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 2122/ '17

      கௌரவ ஜயந்த சமரவீர,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பெற்றோல் இறக்குமதியின் போது ஒரு லீற்றர் பெற்றோலுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்படும் இறக்குமதி வரி எவ்வளவென்பதையும்;

      (ii) பெற்றோல் லீற்றருக்கு அரசாங்கத்தினால் இறக்குமதி வரி தவிர வேறு வரிகள் அறவிடப்படுகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனின், அவ்வரிகள் யாவை என்பதையும்

      (iv) ஒரு லீற்றருக்கு அறவிடப்படும் வரியின் அளவு, ஒவ்வொரு வரி வகைக்கு ஏற்ப எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) ஒரு லீற்றர் பெற்றோலுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்படும் மொத்த வரியின் அளவு ஒரு லீற்றர் பெற்றோலின் சில்லறை விற்பனை விலையின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

      (ii) ஒரு லீற்றர் பெற்றோலுக்கு அரசாங்கத்தினால் அறவிடப்படும் அனைத்து வரிகளையும நீக்கினால், நுகர்வோருக்கு ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனை செய்யக்கூடிய சில்லறை விலை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) ஒரு லீற்றர் பெற்றோலுக்காக அரசாங்கத்தினால் வெவ்வேறு வகையான வரிகள் அறவிடப்படுகின்றமையானது பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை ஏற்றத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளதென்பதையும்;

      (ii) ஒரு லீற்றர் பெற்றோலுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்படும் அனைத்து வரிகளையும் நீக்கினால், பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலையை குறைக்க முடியுமென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-08

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks