E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2169/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 2169/ '17

      கௌரவ விஜித்த ஹேரத்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

      (அ) (​i) உமாஒய கருத்திட்டத்துக்கென சுவீகரிக்கப்பட்ட வீடுகள், மேட்டு நிலக் காணிகள் மற்றும் வயல் காணிகளுக்காக இழப்பீடு செலுத்துவதற்கு உள்ள ஆட்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய எவ்வளவென்பதையும்;

      (ii) சொத்துக்கள் சுவீகரிக்கப்பட்டுள்ள போதிலும், 2014 ஒக்றோபர் மாதத்திலிருந்து இன்றுவரை இழப்பீடு செலுத்தப்படாத ஆட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய எவ்வளவென்பதையும்;

      (iii) இற்றைவரை இழப்பீடு செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தில் வைப்பிலிடப்படும் அடிப்படை யாதென்பதையும்;

      (v) இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்படுமா என்பதையும்;

      (vi) ஆமெனில், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

      (vii) சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்துவதற்கான அடிப்படை யாதென்பதையும்;

      (viii) இற்றைவரை இழப்பீடு கிடைக்காமல் அநீதிக்குள்ளாகியுள்ள ஆட்களுக்கு உடனடியாக இழப்பீடு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-06

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks