E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2184/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 2184/ '17

      கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2017 ஆம் ஆண்டு மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததனால்,

      (i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை;

      (ii) அங்கவீனமுற்றோர்களின் எண்ணிக்கை;

      (iii) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை;

      (iv) உயிரிழந்த ஒருவருக்குச் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை;

      (v) சேதமடைந்த வீடுகளுக்காகச் செலுத்தப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நட்டஈட்டுத் தொகை;

      எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்று வழங்கப்பட்ட அண்மித்த திகதி யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks