E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2202/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1. 2202/ '17

      கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கண்டி, கம்பளை – தொலொஸ்பாகே வீதியை விஸ்தரித்து காபட் இடும் கருத்திட்டம் 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) அதன் முதல் கட்டமாக குருந்துவத்த முதல் கம்பளை வரையிலான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டு நிறைவடையும் போது 8 கிலோமீற்றர்களுக்கான வேலைகள் நிறைவுபெற்றதென்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) கம்பளையிலிருந்து எஞ்சியுள்ள 4 கிலோமீற்றர் தூரத்தின் வேலைகள் 2015 ஆம் ஆண்டு சனவரி முதல் தடைப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) இவ்வீதி பெருமளவு மக்களினால் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசியமானதொரு வீதி என்பதால், வீதியின் எஞ்சிய 4 கிலோமீற்றரின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-21

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks