E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2205/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. 2205/ '17

      கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து நாநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும்;

      (ii) மேற்படி மீனவர்கள் ஏறத்தாழ 73 கிலோமீற்றர் நீளமான கடற்கரை மற்றும் ஆழ் கடலை பயன்படுத்தி இக் கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்தையும்;

      (iii) இப்பிரதேசத்தில் கலங்கரைவிளக்கம் இன்மையால், மீன்பிடிப் படகுகள் தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மீனவர்கள் முகம்கொடுக்க நேரிடுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பிரதேசத்தில் கலங்கரைவிளக்கமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-06

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks