E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2223/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 2223/ '17

      கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகம் நீண்ட காலமாக பழைய கட்டடமொன்றில் இயங்கி வருவதன் காரணமாக, சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களும் அதேபோன்று அங்கு பணியாற்றும் அலுவலர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்;

      (ii) நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக என்னால் அனுப்பப்பட்ட 2017.07.06 ஆம் திகதிய கடிதம் தொடர்பாகவும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், எதிர்வரும் காலத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-20

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks