பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2322/ '17
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டு கமத்தொழில் அமைச்சின் மாத்தளை கமநல அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டத்தின் கீழ் கலேவெல பிரதேச செயலாளர் பிரிவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு வாவிக்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை மற்றும் நீர்பாய்ச்சப்படுகின்ற வயல் ஏக்கர்களின் அளவு யாவையென்பதையும்;
(ii) மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு கமக்காரர் அமைப்பும் கிராம சேவகர் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) ஒவ்வொரு ஒப்பந்தத்தின் மூலமும் மேற்படி கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற இலாபம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) கமக்காரர் அமைப்பின் கணக்கிற்கு இலாபம் வரவு வைக்கப்பட்டிருப்பின், அத்தகவல்களை சபா பீடத்திற்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) கமக்காரர் அமைப்புகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்திட்ட ஒப்பந்தங்கள் உப ஒப்பந்தகாரர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பின், குறிப்பிட்ட உப ஒப்பந்தங்களுக்கான உடன்படிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) உடன்படிக்கைகளுக்கு வராமல் வாய்மூல இணக்கப்பாட்டுடன் உப ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனரா என்பதையும்;
(iii) ஒவ்வொரு கருத்திட்டத்தின் மூலமும் கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் எவ்வளவென்பதையும்;
(iv) கமக்காரர் அமைப்புகளுக்கு உப ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம் கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் மற்றும் அது ஒப்பந்தத்தின் விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-03-20
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks