E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2397/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 2397/ '17

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை குருநாகல் மாவட்டத்தில் பதிவாகிய தலசீமியா நோயாளிகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி நோயாளிகள் பதிவாகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை;

      (iii) வடமேல் மாகாணத்தில் தலசீமியா நோயாளிகளுக்கு அவசியமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்ற வைத்தியசாலைகள் யாவை;

      (iv) மேற்படி நோய்க்கு அவசியமான சிகிச்சை வசதிகளை ஏனைய வைத்தியசாலை களுக்கும் வழங்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

      (v) இந்த நோயாளிகளுக்கான இரையானவர்களுக்கான சத்திரசிகிச்சைக் கூடமொன்றும் மரபணு வங்கியொன்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ளதா;

      (vi) இந்த நோயாளிகளுக்கு அவசியமான சிகிச்சைகளையும் மருத்துவ வசதிகளையும் வழங்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-23

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks