E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2464/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 2464/ '17

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்திற்குரிய, இல. 309, கம்பிரிஸ்வெவ கிராம அலுவலர் பிரிவு, துலானே, அ/மனாருல் உலும் மகா வித்தியாலயம் "1000 பாடசாலைகள்" கருத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு பாடசாலை என்பதையும்;

      (ii) இப்பாடசாலையில் சுமார் 700 மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள் என்பதையும்;

      (iii) இக்கருத்திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு ஒரு கட்டடம் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் இற்றைவரை வேறெந்த வசதிகளும் வழங்கப்படவில்லையென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் கருத்திட்டத்தின் கீழேனும் இந்த பாடசாலைக்கு தேவையான வசதிகள் வழங்கப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks