பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0001/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 1/ '18

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நோபல் ரிசோசஸ் லிமிட்டட் எனும் கம்பனியினால் இலங்கை மின்சார சபைக்கு இடைக்கிடை வழங்கப்பட்டுள்ள மொத்த நிலக் கரியின் அளவு யாதென்பதையும்;

      (ii) மேற்படி நிலக்கரி சார்பாக குறிப்பிட்ட கம்பனிக்குச் செலுத்தப்பட்டுள்ள மொத்த பணத் தொகை யாதென்பதையும்;

      (iii) குறித்த கம்பனியானது உரிய நேரத்திற்கு நிலக்கரி வழங்குவதற்கு தவறியதன் காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் தொழிற்பாட்டினை இடைநிறுத்த வேண்டியேற்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;

      (iv) அவ்வாறு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் தொழிற்பாடு இடைநிறுத்தப் பட்டதன் விளைவாக இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நோபல் ரிசோசஸ் லிமிட்டட் நிறுவனத்தினால் பெறப்பட்டுள்ள இலக்கம் LCC/09/T/02, LCC/01 மற்றும் LCC/13/T/01 கேள்விப்பத்திரங்களுக்கு ஏற்புடையதான இலங்கையின் உள்ளூர் பிரதிநிதிகள் வெவ்வேறாக யார் என்பதையும்;

      (ii) பெறுகை செயல் நடைமுறையைக் கருத்திற்கொள்ளாது மேற்படி நிலக்கரி வழங்கல் குறிப்பிட்ட கம்பனிக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks