E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0011/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 11/ '18

      கௌரவ கனக ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் ஆகக் குறைந்த வசதிகளுடன் இயங்கி வருகின்ற மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) "அண்மையிலுள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை" எனும் வேலைத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) அவற்றில் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) இதுவரை நிறைவு செய்யப்படாத கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iv) அக் கருத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி அனைத்து கருத்திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (vi) அதற்காக எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-18

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks