E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0147/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 147/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத என்ஜின்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) புகையிரத என்ஜின்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் வழங்கும் போது பின்பற்றப்பட்டுள்ள நடைமுறை யாதென்பதையும்;

      (iv) புகையிரத என்ஜின்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தினம் முதல் இற்றை வரை அதன் மூலமாக புகையிரத திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள வருடாந்த வருமானம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி உடன்படிக்கைகள் காரணமாக புகையிரத திணைக்களத்திற்கு பாரிய நிதிசார் இழப்பீடு ஏற்படுவதாக பல்வேறு சாரார்களால் எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்ய அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-25

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks