E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0178/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 178/ '18

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) "House of Justices" கருத்திட்டத்தின் கீழ் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு கட்டடத் தொகுதியொன்றையும், நீதிபதிகளை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றையும் மற்றும் நீதிமன்ற அலுவல்களுக்காக கட்டடத் தொகுதியொன்றையும் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு எவ்வளவென்பதையும்;

      (iii) நிர்மாணப் பணிகளுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) அதன் பொருட்டு முன்வந்த கம்பனிகளும் அவை சமர்ப்பித்த விலைகளும் யாவை என்பதையும்;

      (v) மேற்படி நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்ற ஒப்பந்தக் கம்பனி யாதென்பதையும்;

      (vi) அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks