E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0192/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 192/ '18

      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 ஆம் ஆண்டின் திசெம்பர் மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வௌ்ளப்பெருக்கு நிலைமை காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக்கேணி பாலம் அழிவடைந்ததென்பதையும்;

      (ii) இற்றைவரை இப்பாலம் முழுமையாக மறுசீரமைக்கப்படாது, தற்காலிகமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) நாளாந்தம் பெரும் எண்ணிக்கையான மக்கள் பயன்படுத்துகின்ற இப்பாலத்தை மறுசீரமைக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது;

      (ii) இற்றைவரை இப்பாலத்தை மறுசீரமைக்காதிருந்தமைக்கான காரணம் யாது;

      (iii) இப்பாலத்தை இயலுமான விரைவில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks