பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
225/ '18
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 600 மாணவர்களுக்கு தங்கியிருந்து தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்பதையும்;
(ii) எனினும், மாணவர் விடுதி சுமார் 25 வருடங்களாக மறுசீரமைக்கப்படாமையின் காரணமாக சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
(iii) இதன் காரணத்தினால் ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்று ரூபா பத்தாயிரம் ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு, வெளிவாரியான தங்குமிடங்களுக்கு பெருமளவு பணத்தொகையை செலவிட வேண்டி ஏற்படுவதன் மூலம் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மாணவர்களின் வசதியைக் கருதி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விடுதியை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) ஆமெனில், இம்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-10
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks