பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0310/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 310/'18

      கௌரவ புத்திக பத்திறண,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வகைப்படுத்தாத குப்பைகளை சேகரிக்காதிருப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவை பற்றி மக்களை விழிப்புணர்வூட்டத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

      (iii) குப்பைகளை வகைப்படுத்தி சேகரிக்கத் தேவையான வசதிகள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

      (v) வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை சேகரிப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) குப்பைகளை வகைப்படுத்தித் தராத ஆட்களுக்கெதிராக எடுக்கபடும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் மீள்சுழற்சி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், அது எந்த இடத்தில் என்பதையும்;

      (iv) அதற்காக முதலீடு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (v) மீள்சுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை எத்தகைய பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks