E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0394/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 394/ '18

      கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

      (iii) 2014 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து அரசு பெற்றுக்கொண்ட வருமானம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் தனித் தனியாக யாதென்பதையும்;

      (iv) 2014 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் மூலம் அரசு பெற்றுக்கொண்ட வருமானம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் தனித்தனியாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கை போக்குவரத்து சபையில் சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-03

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks