E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0432/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 432/ '18

      கௌரவ இஷாக் ரஹுமான்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தின், கெக்கிராவ நகர எல்லையில் அமைந்துள்ள நகரசபை கட்டடத்திற்கு பின்புறமாக உள்ள பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் வசிக்கின்றன என்பதையும்;

      (ii) இவர்கள் உரிய தரமற்ற குடிசைகள் மற்றும் வீடுகளை நிர்மாணித்து அவற்றில் வசித்து வருகின்றார்கள் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) நகர அபிவிருத்தியைப் பொறுத்தவரை முக்கியமான நகர எல்லையில் அமைந்துள்ள மேற்படி பகுதியை உரிய ஒழுங்குமுறைப்படி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks