பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
439/ '18
கெளரவ ஜயந்த சமரவீர,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) டீசல் இறக்குமதி செய்யும் போது ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் அறவிடுகின்ற இறக்குமதி வரி எவ்வளவு என்பதையும்;
(ii) ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் இறக்குமதி வரி தவிர வேறு வரிகளை அறவிடுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வரிகள் யாவை என்பதையும்;
(iv) ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரித் தொகை, ஒவ்வொரு வரி வகைக்கும் அமைய எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் அறவிடுகின்ற மொத்த வரித் தொகையானது, ஒரு லீற்றர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எத்தனை சதவீதமாகும் என்பதையும்;
(ii) டீசலுக்கு அரசாங்கம் அறவிடுகின்ற சகல வரிகளையும் நீக்கும் பட்சத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு லீற்றர் டீசலை பெற்றுக் கொடுக்கக்கூடிய சில்லறை விலை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) டீசலுக்கு அரசாங்கம் பல்வேறு வகையிலான வரிகளை அறவிடுவதானது பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைகள் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்பதையும்;
(ii) டீசலுக்கு அரசாங்கம் அறவிடுகின்ற சகல வரிகளையும் நீக்கும் பட்சத்தில், பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைகளைக் குறைக்க முடியும் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-08
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks