E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0440/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 440/ '18

      கௌரவ ஜயந்த சமரவீர,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வாத்துவ சந்தியில் இருந்து மொறன்துடுவ சந்தி வரை செல்கின்ற வாத்துவ மொறன்துடுவ வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தை ஆரம்பிக்க மற்றும் நிறைவுசெய்ய உத்தேசித்துள்ள திகதிகள் யாவை;

      (ii) அந்த வீதியின் நீளம், தற்போது தார் இடப்பட்டுள்ள அளவின் அகலம் மற்றும் மொத்த அகலம் எவ்வளவு;

      (iii) காபற் இடுவதற்கு எதிர்பார்த்துள்ள அகலம் மற்றும் அபிவிருத்திக்குப் பின்னரான வீதியின் மொத்த அகலம் எவ்வளவு;

      (iv) அபிவிருத்தி செய்யப்படுகின்ற பாலங்களின் எண்ணிக்கை மற்றும் மதகுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி வீதிக் கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவு;

      (ii) மேற்படி பணத்தொகையில் காணிகள் மற்றும் ஆதனங்களின் இழப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு;

      (iii) நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு;

      (iv) நிர்மாணப் பணிகள் யாரால் மேற்கொள்ளப்படும்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks