பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2120/ '17
கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) 2015.01.09 ஆம் திகதி உள்ளவாறு மற்றும் 2017.06.30 ஆம் திகதி உள்ளவாறு,
(i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை கடற்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி முகாம்களுக்கு இணைக்கப்பட்டு சேவையாற்றிய மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.30 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,
(i) அகற்றப்பட்டுள்ள கடற்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) கடற்படை முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கடற்படை முகாம்களையும் இவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் படைவீரர்களையும் அகற்றி இராணுவத்தை பலவீனப்படுத்துதலானது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-20
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks