E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0480/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டி.வீ. சானக, பா.உ.

    1. 480/ '18

      கௌரவ டீ.வீ. சானக,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் மயபடுத்துவதற்காக இரண்டு கம்பனிகளிலிருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்கம்பனிகளில் ஒரு கம்பனி தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iii) அக்கம்பனியை தேர்ந்தெடுக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் அமைச்சரவை பெறுகைக் குழுவும் வழங்கியுள்ள விதப்புரைகள் யாவையென்பதையும்;

      (iv) தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பனியுடன் கைசாத்திடப்படும் இரண்டு உடன்படிக்கைகளும் யாவையென்பதையும்;

      (v) மேற்படி உடன்படிக்கைகள் மூலமாக தாபிக்கப்படும் இரண்டு கம்பனிகளினதும் பங்குகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும்;

      (vi) மேற்படி இரண்டு கம்பனிகளுக்கும் ஒப்படைக்கப்படும் பணிகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (vii) அக்கம்பனிகளுக்கு கிடைக்கும் வருமான வழிகள் யாவையென்பதையும்;

      (viii) தற்போது கடமைபுரிகின்ற ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      (ix) துறைமுகத்தின் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்படும் கம்பனி யாதென்பதையும்;

      (x) மேற்படி தனியார்மயமாக்கல் மூலமாக அரசாங்கத்திற்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்ற வருமான மூலங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ டி.வீ. சானக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks