பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
481/ '18
கெளரவ டி.வி. சானக,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார்மயப்படுத்தும் உடன்படிக்கையின் மூலம் வழங்கப்படுகின்ற காணிகளின் அளவு மற்றும் அவை வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
(ii) மேற்படி உடன்படிக்கையின் மூலம் தொழிற்பாட்டு முனையத்திற்காக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு குத்தகை வாடகை அறவிடப்படுமா என்பதையும்;
(iii) மேற்படி துறைமுகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களின் நிர்மாணிப்பு உரிமை உடன்படிக்கை செய்துகொண்டுள்ள இரண்டு கம்பனிகளில் ஒன்றுக்கு வழங்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
(v) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்தின் போது நிர்மாணிக்கப்பட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தீவு இவ்விரண்டு கம்பனிகளில் ஒன்றுக்கு வழங்கப்படுமா என்பதையும்;
(vi) ஆமெனில், வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
(vii) இதற்காக உள்நாட்டு அல்லது சர்வதேச கம்பனியொன்றிலிருந்து விலைமதிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(viii) இன்றேல், அப்பெறுமதி தீர்மானிக்கப்பட்ட அடிப்படை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-21
கேட்டவர்
கௌரவ டி.வீ. சானக, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks