E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0483/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. கௌரவ லக்கி ஜயவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் இலங்கையில் பேணிவரப்படுகின்ற வானொலி அலைவரிசைகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி வானொலி அலைவரிசைகளை பேணிவருகின்ற நிறுவனங்கள் யாவை;

      (iii) மேற்படி வானொலி அலைவரிசைகளின் உரிமையாளர்கள் யார் மற்றும் மேற்படி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;

      (iv) இன்றளவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்பு மேற்கொள்ளப் பட்டுவராத வானொலி அலைவரிசைகள் உள்ளனவா;

      (v) ஆமெனில், அந்த அலைவரிசைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற நிறுவனம் யாது;

      (ii) தற்போது மேற்படி வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்தல் முறைசார்ந்த வகையில் இடம்பெறுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (iii) சமூகப் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் ஒருசில வானொலி அலைவரிசைகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்படுவதை தடுப்பதற்காக வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக முறைசார்ந்த முறையியலொன்றை துரிதமாக தயாரிப்பாரா;

      (iv) ஆமெனில், அது எவ்வாறு;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-21

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks