பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
488/ '18
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சோலை, லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற சுற்றாடல் மாசடைவதை குறைக்க உத்தேச காற்றுத் தடுப்பை நிர்மாணிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) காற்றுத் தடுப்பு இன்மையினால் மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வாழ்கின்ற விவசாயிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(iii) காற்றுத் தடுப்பை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலைய வளவினுள் சாம்பல் குவிக்கப்டுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வௌியேறும் சாம்பல் காரணமாக பயிர்கள் அழிவடைந்துள்ள விவசாயிகளுக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லுபடியான சுற்றாடல் பாதுகாப்பு உரிமப்பத்திரம் இருக்கின்றதா என்பதையும்;
(ii) அவ்வுரிமப்பத்திரம் வழங்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) அவ்வுரிமப்பத்திரத்தின் காலம் முடிவடையும் திகதி யாதென்பதையும்;
(iv) குறித்த உரிமப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியமைக்கான பொறுப்பை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்கின்றதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-20
கேட்டவர்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks