07

E   |   සි   |  

சில வழக்குகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட நியாயாதிக்கம் உயர் நீதிமன்றத்தினால் பியோகிக்கப்படும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அல்ல எனவும் ஏற்பாடு செய்வதற்காக உறுப்புரை 140இற்கான திருத்தம்.

பாராளுமன்ற உறுப்பினரர்களின் பதவி விலகல், வெளியேற்றம் அல்லது வேறுவிதமான பதவி துறப்புகள் தொடர்பான நடவடிக்கைமுறைகள் பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும் உறுப்புரை 161இன் பந்தி (ஈ)இல் உபபிரிவு (ii)ஐ சேர்த்தல்.

தனது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு வருடங்கள் முடிவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு காலப்பகுதிக்கு பதவி வகிப்பதற்கு ஆணை ஒன்றை வழங்குமாறு மக்களைக் கோரும் தனது நோக்கத்தை எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதற்கு வகை செய்வதறகாக உறுப்புரை 31இன் பந்தி (4)ஐ நீக்கி பந்தி (3அ)வை உட்புகுத்துதல்.

தனது பதவிக்காலம் ஆரம்பித்து இரண்டு வார காலத்தினுள் கடமையைப் பொறுப்பேற்பதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தவறினால், ஜனாதிபதிப் பதவி வறிதாதல் வேண்டும் என ஏற்பாடு செய்யும் உறுப்புரை 38இன் திருத்தம்.

ஜனாதிபதிப் பதவியை வகித்தல் பற்றிய உறுப்புரை 160இன் திருத்தம்.

முதலாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலுமொரு ஆறு வருடங்களுக்கு, அதாவது, 1989 ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை நீடிப்பதற்காக உறுப்புரை 161இன் திருத்தம்.

முதலாவது பாராளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடம் ஒன்றுக்கு உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர் தவறுவாராயின், இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்காக உறுப்புரை 161இன் திருத்தம்.

உறுப்புரை 157இன் பின்னர் உட்புகுத்தப்பட்ட உறுப்புரை 157அவிற்கு அங்கீகாரமளிப்பதற்காக உறுப்புரை 101இன் திருத்தம்.

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறுவதற்கெதிரான தடை பற்றிய உறுப்புரை 167அ இன் உட்புகுத்தல்.

மேற்குறிப்பிடப்பட்ட உறுப்புரை 157அ மற்றும் அரசியலமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ள ஏழாவது அட்டவணை ஆகியவற்றிற்கு அங்கீகாரமளிக்கும் உறுப்புரை 161இன் திருத்தம்.

உறுப்புரை 157அ தொடர்பான பிரகடனத்தையும் உறுதிப்பிரமாணத்தையும் உள்ளடக்குவதற்கான ஏழாவது அட்டவணையின் சேர்க்கை.

நிர்வாக மாவட்டங்களை 25ஆக அதிகரிப்பதற்கான உறுப்புரை 5இன் திருத்தம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தைத் தோற்றுவிப்பதன் மூலம் தேர்தல் மாவட்டங்களை 25ஆக அதிகரிப்பதற்காக உறுப்புரை 96இன் திருத்தம்.

மேல் நீதிமன்ற ஆணையாளரை நியமிப்பது பற்றிய உறுப்புரை 111அ வின் உட்புகுத்தல்.

கிளிநொச்சியை ஒரு நிர்வாக மாவட்டமாகச் சேர்ப்பதற்காக முதலாவது அட்டவணையின் திருத்தம்.

இராணி வழக்கறிஞர் ஒருவர் அனுபவிக்கும் சிறப்புரிமைகளுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் தத்துவங்களை அதிகரிக்க உறுப்புரை 33இன் திருத்தம்.

திருத்திய உறுப்புரை 33இன் பிரகாரம் உறுப்புரை 136இன் திருத்தம்.

இராணி வழக்கறிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பற்றிய உறுப்புரை 169அ வின் உட்புகுத்தல்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவதற்கு தகைமை பெறாத அரசாங்க ஊழியர்களின் சம்பள அளவுத்திட்டங்களைத் திருத்துவதற்காக உறுப்புரை 91இன் திருத்தம்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனம் ஒன்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்னும் தேவைப்பாட்டை நீக்குவதற்காக உறுப்புரை 155இன் திருத்தம்.

முதல் முறை குற்றவியல் நியாயாதிக்கத்தை மேல்நீதிமன்றத்திலிருந்து நீக்குவதற்காக உறுப்புரை 111இன் திருத்தம்.

அட்டவணையிடப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் நீதிச்சேவை ஆணைக்குழு விதிகளை ஆக்குவதற்கு வகை செய்வதற்காக உறுப்புரை 112இன் திருத்தம்.

முதல்நிலை நீதிமன்றங்களிலுள்ள பிரதி பிஸ்கால்களை மேற்பார்வை செய்து அவர்கள்மீது கட்டுப்பாடடைப் பிரயோகிக்கும் பிஸ்கால் பதவியை உருவாக்குவதற்காக உறுப்புரை 113அ வின் உட்புகுத்தல்.

அட்டவணைப்படுத்தப்பட்ட அலுவலர்களை மட்டும் இடம் மாற்றும் வகையில் நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தத்துவத்தை வரையறுப்பதற்கும் பிஸ்கால்களையும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க அலுவலர்களுள் உள்ளடக்குவதற்கும் உறுப்புரை 114இன் திருத்தம்.

ஒவ்வொரு நீதிபதிகள் குழுவிலும் அடங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக உறுப்புரை 146இன் திருத்தம்.

பிஸ்கால்களை பிரதிப் பிஸ்கால்களினால் பதிலீடு செய்வதற்காக ஐந்தாவது அட்டவணையின் திருத்தம்.

கெளரவ தினேஸ் குணவர்தன அவர்களினால் இது முதலாவது பாராளுமன்றத்தில் 1987-09-25ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், நி.க 47(5) ன் கீழ் அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

தமிழை உத்தியோகபூர்வ மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்குவதற்கு உறுப்புரை 18ற்கான திருத்தம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பான உறுப்புரை 138ற்கான திருத்தம்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் மாகாண சபை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக உறுப்புரை 154 A முதல் உறுப்புரை 154 T வரையான உறுப்புரைகள் உள்ளிட்ட அத்தியாயம் XVII A யினை உட்சேர்த்தல்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால ஒழங்கு விதிகளை உருவாக்குவதற்காக உறுப்புரை 155ற்கான திருத்தம்.

கீழம் மாகாண சபைகளினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களையும் எழுதப்பட்ட சட்டங்கள் எனும் வரைவிலக்கணத்தில் உள்ளடக்குவதற்காக உறுப்புரை 170ற்கான திருத்தம்.

ஒன்பது மாகாணங்களுக்கும் பெயரிடுவதற்காக எட்டாவது அட்டவணையையும், மாகாணசபைகள் பட்டியல், ஒதுக்கப்பட்ட பட்டியல் மற்றும் ஒருங்கியல் பட்டியல் ஆகியவற்றினை விபரிப்பதற்காக ஒன்பதாவது அட்டவணையையும் உட்சேர்த்தல்.

குறிப்பிட்ட சட்ட விடயங்களில் சனாதிபதிக்கு சட்டத்தினால் பாதிப்பேற்படாத நிலைக்குரிய பாதுகாப்பிற்கு விலக்களிப்பதற்காக உறுப்புரை 35ற்கான திருத்தம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 225 வரையில் அதிகரிப்பதற்காக உறுப்புரை 62ற்கான திருத்தம்.

ஒரு சட்டமூலம் பற்றி மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றிற்கு மனுசெய்யப்பட்டிருக்குமிடத்து, அச்சட்டமூலத்தின் சான்றுப்படுத்தலானது சனாதிபதியினால் அங்கீகரிக்கப்படலாகாது எனும் நிபந்தனையினை உள்ளடக்குவதற்காக உறுப்புரை 80ற்கான திருத்தம்.

எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்காகவும் தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதற்காகவும் உறுப்புரை 96அ வை உட்சேர்த்தல்.

உறுப்புரை 96அ வை அமுல் படுத்துவதற்காக உறுப்புரை 98ற்கான திருத்தம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையினை அமுல்படுத்துவதற்காக உறுப்புரை 99னை பதிலீடு செய்தல்.

பொதுத்தேர்தல் ஒன்றில் ஒவ்வொரு கட்சியும் சுயாதீனக் குழுக்களும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேசியப் பட்டியலில் இருந்து 29 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பாக உறுப்புரை 99 அ வை உட்சேர்த்தல்.

மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு மனு அடங்கலாக தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பில் உயர் நீதி மன்றத்தின் நியாயாதிக்கத்தினை விஸ்தரிப்பதற்காக உறுப்புரை 130ற்கான திருத்தம்.

தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதனை இரத்துச் செய்வதற்காக உறுப்புரை 96 அ வை நீக்குதல்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டமும் தெரிவு செய்ய உரித்துக் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தேர்தல்கள் ஆணையாளர் சான்றுப்படுத்தல் தொடர்பாக உறுப்புரை 98ற்கான திருத்தம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையிலுள்ள வெட்டுப் புள்ளியினை எட்டில் ஒன்றில் இருந்து இருபதில் ஒன்றாகக் குறைப்பதற்கும் தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதனை இரத்துச் செய்வதற்கும் உறுப்புரை 99ற்கான திருத்தம்.

இனத்துவ அல்லது வேறுவகையிலான எந்தவொரு இனத்திலிருந்தும், பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதன் தேசிய சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஒத்ததாக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்துவதற்காக உறுப்புரை 99 அ வி ற்கான திருத்தம்.

மாகாணசபை உறுப்பினர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இரு தேசியமொழிகளுள் ஏதேனுமொன்றை ஒன்றினைப் பயன்படுத்தக்கூடியதாக உறுப்புரை 20ற்கான திருத்தம்.

சிங்களத்தையும் தமிழையும் நிர்வாக மொழிகளாகவும் சட்டவாக்க மொழிகளாகவும் ஆக்குவதற்காக உறுப்புரைகள் 22 மற்றும் 23 னை பதிலீடு செய்தல்.

சிங்களத்தையும் தமிழையும் நீதிமன்ற மொழிகளாக ஆக்குவதற்காக உறுப்புரை 24ற்கான திருத்தம்.

வேறு ஏதாவது சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாமை ஏற்படுகையில், இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேலோங்கி நிற்கச் செய்வதற்காக உறுப்புரை 25 அ வினை உட்சேர்த்தல்.

அரசியலமைப்புச் சபையினை நிறுவுவதற்காக 41 A முதல் 41H வரையான உறுப்புரைகள் உள்ளடங்கலாக அத்தியாயம் VII A வை உட்சேர்த்தல்.

அரச சேவை ஆணைக்குழு தொடர்பான அத்தியாயம் IX னை உட்சேர்த்தல்.

சனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் தொடர்பாக உறுப்புரை 65ற்கான திருத்தம்.

தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XIVA ஐ உட்சேர்த்தல்.

நீதிச் சேவை ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XVA ஐ உட்சேர்த்தல்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XVIIA ஐ உட்சேர்த்தல்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks