பார்க்க

E   |   සි   |  

2010-05-26

வெசாக் நிகழ்ச்சித்திட்டம் - 2010

கெளரவ சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதையடுத்து வந்த முதலாவது வெசாக் தினம் 2010.05.27ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இதன் நிமித்தமாக மிகவும் எளிமையான, ஆயினும் கெளரவமான முறையில் மத வைபவமொன்றை 2010.05.26 ஆம் திகதியன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கெளரவ சபாநாயகர் ஆலோசனை வழங்கியிருந்தார். இதனையடுத்து பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலுக்கிணங்க மேற்படி மத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற புண்ணிய கருமங்கள்

2010.05.26 ஆம் திகதி மாலை சங்கைக்குரிய மிரிஸ்ஸே தம்மாலோக தேரரினால் வெசாக் தர்ம போதனை நிகழ்த்தப்பட்டது. இந்த புண்ணிய கருமம் பாராளுமன்ற பெளத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற புண்ணிய கருமங்கள்

  • லும்பினி சல் வனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சல் (நாகலிங்க) கன்றுகளை விநியோகம் செய்தல்

சித்தார்த்த குமாரரின் பிறப்பு நிகழ்ந்த போது சித்தார்த்த கெளதமருக்கு நிழல் தந்த நாகலிங்க மரத்தின் விதைகளிலிந்து கன்றுகளைப் பெற்று இந்நாட்டுக்கு கொண்டுவந்து அலரி மாளிகையிலுள்ள ஜயஸ்ரீ மகா போதி மர நிழலில் நாட்டி அதனைப் பாதுகாப்பதற்கு, கெளரவ சமல் ராஜபக் அவர்கள் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் லும்பினிக்கு யாத்திரை சென்ற சமயத்தில் நடவடிக்கை எடுத்தார். இந்த நாகலிங்க மரக் கன்றுகளை கோட்டே ரஜ மகா விஹாரை, கோட்டே ஸ்ரீ நாக விஹாரை முதற்கொண்ட 12 விஹாரைகளுக்கும் பாடசாலைகளுக்கும் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கும் கெளரவ சபாநாயகரின் கரங்களினாலேயே வழங்குகின்ற எளிமையான நிகழ்சியொன்று இத்தினத்தில் நடைபெற்றது.

கோட்டே ரஜ மகா விஹாரை அதிபதி சங்கைக்குரிய அலுத்நுவர அநுருத்த தேரர், ஸ்ரீ நாக விஹாரை அதிபதி சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர், நெதிமால பெளத்த கலாசார நி்லையத்தின் தலைவர் சங்கைக்குரிய விமலஜோதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரும் பாடசாலை அதிபர்கள் மற்றும் விசேட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  • போதி பூஜை புண்ணிய கருமம்

பி.ப. 6.00 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் அமைந்துள்ள போதி விருட்சத்தின் முன்நிலையில் போதி பூஜை புண்ணிய கருமம் கெளரவ சபாநாயகரின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், உதவி செயலாளர் நாயகம், திருமதி சமல் ராஜபக்ஷ உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • பொது பெத்தி கீ குசும் சரணிய (பெளத்த பக்திக் கீதங்கள்)

மினுவன்கொட கலாசார கலையாக்க ஒன்றித்தின் 20 சிறுவர்களும் சிறுமிகளும் இந்நிகழ்ச்சியை வழங்கினர். பாராளுமன்ற இலங்கை வங்கிக் கிளை இதற்கான அனுசரனையை வழங்கியது.

பங்களிப்பு

  • கெளரவ சபாநாயகர் மற்றும் குடும்ப உறவினர்கள்
  • பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கீதாங்ஜன குணவர்தன அவர்கள் உட்பட சபாநாயகரின் சிறப்பு அதிதிகள்
  • பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், உதவி செயலாளர் நாயகம், திணைக்களத் தலைவர்கள் உட்பட பணியாட்தொகுதி பிரதிநிதிகள்
  • பாராளுமன்றத்தின் ஏனைய அலுவலகங்களின் பிரதானிகள்
  • பாராளுமன்ற இலங்கை வங்கிக் கிளை மற்றும் பணியாட்தொகுதிகளின் பிரதிநிதிகள்
  • பாராளுமன்ற ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள்
  • பக்திக்கீதங்கள் நிகழ்சிசியில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர்களும் குடும்ப உறவினர்களும்

பெத்தி கீ குசும் சரணியின் இறுதியல், பக்திக் கீதங்களைப் பாடிய சிறுவர் சிறுமியருக்கு கெளரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் அழைப்பு விருந்தினர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இந் நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணை அரச தகவல் திணைக்களம் உட்பட அரசாங்க மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks