பார்க்க

E   |   සි   |  

2024 ஆகஸ்ட் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும்;
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பிரதமர் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 ஆகஸ்ட் 05 ஆம் திகதிய 2396/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(x)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.06.10 முதல் 2024.07.10 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரம் பேணல், கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ உதய கம்மன்பில                    
(ii)    கௌரவ அஜித் மான்னப்பெரும        -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சம்பத் அதுகோரல         -     இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் 

தான் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை பதிவிட்டுள்ள இணையத்தளம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரையாண்டு அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை - 2024” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1615 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஆகஸ்ட் 08ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks