பார்க்க

E   |   සි   |  

2024 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “மாகாணசபை தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B :பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii)    2022/2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் சார்பாக  அதன் உறுப்பினர், கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக  அதன் உறுப்பினர், கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கையில் முன்மொழியப்பட்ட வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண் பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின்  அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விஜித பேருகொட                    
(ii)    கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் குறைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“நிகழ்நிலைக் காப்பு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii)    அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்


அதனையடுத்து, 1256 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஆகஸ்ட் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks