பார்க்க

E   |   සි   |  

2024 செப்டெம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 / 2020 ஆம் ஆண்டுக்கான மாந்தை உப்பு லிமிற்றெட்டின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான பேராதனை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உரிமைகள் காப்புறுதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(v)    2021 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின்  வருடாந்த அறிக்கை

(vi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.07.11 முதல் 2024.08.21 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(viii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    இலங்கையின் கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பத்திரன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)     இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும்  நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi)    நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட  குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ வீரசுமன வீரசிங்க                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் 2024.09.04 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களுக்கு “ஜகத் குமார சிசுநென மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii)    கெளரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களுக்கு “ரெட்ஸோ அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii)    கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(iii)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iv)    இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மனித - யானை மோதலுக்கு நிரந்தர தீர்வு” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1736 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஒக்டோபர் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks