பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
2 : 2025 பெப்ரவரி 17ஆம் திகதி, திங்கட்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிறைச்சாலைகள் திணைக்களம், கடன் நிவாரண சபை திணைக்களம் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சமிந்த விஜேசிறி
(ii) கௌரவ சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ ஈ.எம். பஸ்நாயக - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ
(v) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - ஐந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக 2025.01.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.
(ii) நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு இறக்குமதி செய்வது தொடர்பான தவறான செய்தி அறிக்கை தொடர்பான கூற்றொன்றினை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர், கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல்
இலங்கையில் பெருந்தோட்டத்துறைக்கு முக்கியமான இடம் வழங்கப்படுகின்றதோடு, தோட்டங்களின் உரிமை, முகாமைத்துவம் மற்றும் நிருவாகம் பல்வேறு காலக் கட்டங்களில் மாற்றங்களுக்குள்ளாகி வருவதாலும், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடங்கள் பிரதான வீதியிலிருந்து நீண்ட தூரத்தில் தோட்டங்களின் நடுவில் அமைந்துள்ளதாலும், இம்மக்கள் பயன்படுத்தும் தோட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாலும் இந்த வீதிகளை உள்ளூராட்சி மாகாண சபை வீதிகளின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
கிராமிய மக்களுக்கு மிகவும் நெருக்கமான இயக்கமாகிய கூட்டுறவு இயக்கமானது இன்றளவில் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள காரணத்தினால் கூட்டுறவுச் சங்கங்களுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு அரசாங்கம் முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
தற்போது இலங்கையின் அரிசி சந்தை தனியார் துறையைச் சார்ந்த சில வர்த்தகர்களின் பிடியில் சிக்கியிருப்பதால் சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்கு பொருத்தமான வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான பொறுப்பினை வகிக்கும் தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்யும் போது, பொருத்தமான முறையியல்கள் இதுவரை பின்பற்றப்படாததன் காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளமையால், அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் பொருத்தமான முறையியலொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்த பின்னர் ஓய்வூதியம் பெறுவதற்கு இலங்கை வாக்காளர்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருப்பதன் காரணமாக உடனடியாகச் செயலூக்கம் பெறும் வகையில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டம் நீக்கப்பட வேண்டும் என இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
• கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்த நிலையில் மேற்படி சடலங்களை நல்லடக்கம் செய்வதன் மூலம் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாயம் காணப்படுவதாக 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி சடலங்கள் உறவினர்களின் உடன்பாடின்றித் தகனம் செய்யப்பட்டதனாலும், பின்னர், அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்டமையானது சரியானதல்ல எனத் தெரிவித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியதனாலும், இந்தத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களைப் பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் இழக்கச் செய்யப்பட்டதனாலும், இது தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகளும் அழுத்தங்களும் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக மட்டக்களப்பு ஓட்டமாவடி, மஜ்மா நகர் எனும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதனால் உயிரிழந்தவர்கள் தொடர்பாக நிறைவேற்ற வேண்டியிருந்த சமயச் சடங்குகள் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான உரிமையை உறவினர்கள் இழந்ததனாலும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினருக்கு நியாயத்தை நிலைநாட்ட வேண்டியதன் தேவைப்பாடு மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத் தரப்பினர் இழைத்துள்ள மேற்படி பாரதூரமான தவறுகளை விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கிரிக்கெட்டில் ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks