E   |   සි   |  

2025 மார்ச் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டுவதற்கான டிஜிட்டல்  பொருளாதார உபாய முறைகள் பற்றிய விசேட செயலமர்வு
2 : கூட்டுக் காப்புறுதித் திட்டம் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்.
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்று.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான விழிப்புலனற்ற நபர்களின் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். ஜயவர்தன   -  இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட  -  இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார                   
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ   -  மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடமேல் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1838 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 11ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks